இந்தியா, மே 30 -- 30.05.2025 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நிலையில் பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.8,920-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே 29) ஒரு சவரன் ரூ.71,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் வ...