சென்னை,திருச்சி,மதுரை,கோவை, ஏப்ரல் 25 -- சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது; பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதன்முறையாக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

சமீபத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக இணைந்தது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | தமிழ்நாடு சட்டப்பேரவை: 'எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்'!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்தார். பாஜக கூட்டணிக்குப் பின் அதிமுக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வியூகம், கட்டுப்பாடுகள் மற்றும்...