இந்தியா, ஜனவரி 29 -- துள்ளாத மனமும் துள்ளும் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது குட்டி, ருக்கு தான். அந்த படத்தில் விஜய் பெயர் குட்டி, சிம்ரன் பெயர் ருக்கு. 1999ம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. முக்கியமாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் உருவானது இந்தப் படத்தில் தான். எழில் இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், மணிவண்ணன், தாமு உள்ளிட்ட பலரும் நடிக்க, எஸ்.ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் எனலாம்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி செளத்ரி தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும் 200 நாட்கள் வரை வெற்றிகரமாக ஒடியது. மேலும், விஜய்யின் மார்க்கெட்டும் வேற லெவலில் பிக் அப் ஆனது இப்படத்தின் மூலம் தா...