இந்தியா, மார்ச் 25 -- எஸ்.எஸ்.எல்.சி மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகியவை ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான கட்டங்கள். இந்த தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடியவுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தொடங்க இருக்கிறது. அரசு பல்லி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் தேர்வு எழுத தயாராகி விட்டனர். பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கு நன்றாக தயாராகி இருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில், அவர்கள் பயந்துபோய், தேர்வில் தவறான பதிலை எழுத வாய்ப்புண்டு அல்லது அவர்கள் பாதி நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மட்டும் எழுதுகிறார்கள். இது மதிப்பெண்களைக் குறைக்கிறது, இது அவர்களின் ஒட்டுமொத்த முடிவையும் பாதிக்கிறது. ஆனால் தேர்வுக்கு...