இந்தியா, ஏப்ரல் 11 -- இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகத்தான இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர், சிறந்த அதிரடி சண்டை காட்சிகளை கொண்டிருந்த காரணத்தால் தற்போது மீண்டும் ஆஸ்கார் விருது குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் அகாடமி சார்பாக வரும் 2027 ஆம் ஆண்டு முதல் வெளியாகும் படங்களில் ஸ்டண்ட் டிசைன் என்ற புதிய பிரிவில் விருது வழங்கப்பட உள்ளதாக ஆஸ்கார் அகாடமி அறிவித்துள்ளது. இது குறித்தான அறிவிப்பில் ஆர்ஆர்ஆர் படமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க | Oscar Award: முக்கிய அறிவிப்பை வெளியிடும் ஆஸ்கார்.. ஆஸ்கார் விருது விண்ணப்பத்தில் மாற்றமா?

கடந்த வியாழக்கிழமை அதாவது நேற்று (10/04/2025)அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் சிறந்த ஸ்டண்ட் டிசைனுக்கான புதிய ஆஸ்கார் பிரிவுடன் ஸ்டண்ட் ஒர...