இந்தியா, ஏப்ரல் 19 -- நவக்கிரகங்களின் அசைவுகளை பொறுத்துதான் 12 ராசிகளுக்கும் வாழ்க்கை முறை நிர்ணயம் செய்யப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவ்வப்போது நிகழக்கூடிய செயல்பாடுகள் அனைத்தும் கிரகங்களின் மாற்றத்தால் உருவாகின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

அந்த வகையில் காதல் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் வரக்கூடிய தவிர்க்க முடியாத ஒரு உணர்வாக கருதப்படுகிறது. ஒருவருடைய வாழ்க்கையை சொர்க்கம் மற்றும் நரகமாக மாற்றுவது காதல்தான் எனக் கூறப்படுகிறது. நாம் எப்படிப்பட்டவர்களை காதலிக்கின்றோம் என்பதை பொறுத்து அது தீர்மானிக்கப்படுகிறது.

காதல் என்பது ஒருவரை கொஞ்சம் கொஞ்சமாக ரண வேதனைப்படுத்தும் என்பது அனைவரும் கூற கேட்டதுண்டு. நீங்கள் காதலிக்க கூடிய நபர் உணர்ச்சி ரீதியாக ஒட்டாதவர்களாக இருக்கும்பொழுது அது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை அனுபவித்தவர்க...