இந்தியா, மார்ச் 13 -- தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நாளை வெளியாக உள்ள நிலையில், இந்திய ரூபாயை குறிக்கும் ' Rs.' என்ற இலச்சினைக்கு பதிலாக 'ரூ' என்ற தமிழ் எழுத்து இடம்பெற்று உள்ளது விவாதத்தை கிளப்பி உள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் ($), யூரோ (€), பிரிட்டிஷ் பவுண்டு (£), மற்றும் ஜப்பானிய யென் (Euro) போன்ற பிற முக்கிய உலக நாணயங்களை அதன் தனித்துவம் மிக்க இலச்சினைகள் அடையாளப்படுத்துகின்றன. இருப்பினும், இந்திய ரூபாய்க்கு நீண்ட நாட்களாக தனிப்பட்ட இலச்சினைகள் ஏதுமில்லாமல் இருந்தது. ஆங்கில வார்த்தையில் Rupees என்ற சுருக்கத்தை தரும் 'Rs' என்ற சுருக்கத்தையே நீண்டகாலமாக இந்தியர்கள் பயன்படுத்தி வந்தனர். அதை தமிழில் எழுதும் போது ரூபாயின் முதல் எழுத்தை குறிக்கும் 'ரூ' என்ற வார்த்தை தமிழ்நாட்டில் புழகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆ...