இந்தியா, மே 15 -- காதல், மதம், பெண்கள், போர் போன்ற சில சென்சிடிவ்வான விஷயங்களைப் பற்றி பேசி இந்திய மக்கள் பார்ககவே தடை விதிக்கப்பட்ட சில படங்களைப் பற்றி தெரியுமா? இதோ சில படங்களின் விவரங்கள்.

"தி பெயிண்டெட் ஹவுஸ்" (The Painted House) என்ற படம் 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. இந்தப் படமானது சந்தோஷ், சதீஷ் என்ற சகோதரர்களால் இயக்கப்பட்டது. தமிழில் இந்தப் படம் வானம் பூசிய வீடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் சில ஆபாசமான காட்சிகள் இருப்பதாகக் கூறி தணிக்கை வாரியம் படத்தை தடை செய்தது. பின் நீதிமன்றம் தலையிட்டு எந்த தணிக்கையும் இல்லாமல் வெளியிட்டது.

"லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா" (Lipstick Under My Burkha) படம் 2016 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியானது. இதனை அலன்க்ரிதா ஸ்ரீவாஸ்தவா எழுதி இயக்கியிருந்தார். இந்தப்...