இந்தியா, ஆகஸ்ட் 29 -- இந்தியா டுடே நிறுவனம் - சி-வோட்டர் கணிப்பின் ஒரு தொகுப்பாக, அவர்கள் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த முதல்வர்களுக்கான பட்டியலில், முதல் 10 இடத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெயர் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் யார் என்பதை அறிய இந்தியா டுடே இதழ், நாடு முழுக்கு கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது.

இந்தியா அளவில் யார் சிறந்த முதல்வர் என்ற கருத்துக் கணிப்பில் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் மிகச்சிறந்த முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 11ஆவது முறையாகத் தொடர்ந்து அவர் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் 40.4 சதவிகிதம் பேர் யோகி ஆதித்யநாத் தான் சிறந்த முதல்வர் என்று கூறியிருக்கிறார்கள்.

அதேபோல், சிறந்த முறையில் செயலாற்றும் முதல்வர் யார் என்ற ...