இந்தியா, மார்ச் 4 -- இந்தியாவின் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனையான பிவி. சிந்து பல பதக்கங்களை பெற்றுள்ளார். இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்தை வென்று நாட்டினை பெருமை படுத்தியுள்ளார். இந்த நிலையிள் சில மாதங்களுக்கு முன் இவரது திருமணமும் முடிந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது உணவுப் பழக்கம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பி.வி.சிந்து தனது தினசரி உணவு வழக்கம் என்னவென்று தெரிவித்துள்ளார். உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்களைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார். இது உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. அவர் காலை உணவுக்கு முட்டை சாப்பிடுகிறார் எனவும் கூறினார். இது புரதத்தின் நல்ல மூலமாகும்.

இயல்பாகவே விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உ...