இந்தியா, மார்ச் 16 -- இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் தோல்வியுற்றார். அவரை இங்கிலாந்து வீரர் டிரேப்பர் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் டிரேப்பர் 6-1, 0-6, 6-4 என்ற செட் கணக்கில் அல்கராஸை வீழ்த்தி தனது தொழில் வாழ்க்கையின் முதல் மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ரூன் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் 6-ம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவை வீழ்த்தினார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ரூனும், டிரேப்பரும் மோதவுள்ளனர்.

கலிபோர்னியாவில் தொடர்ந்து மூன்று பட்டங்களை வென்ற ஒரே வீரராக ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோருடன் சேர முயற்ச...