இந்தியா, மார்ச் 29 -- உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ்-ஐ தனது ஏஐ நிறுவனமான xAI (Artificial Intelligence) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க பங்கு வரிவர்த்தனை மூலம் நடைபெற்றுள்ளது. இந்த இணைப்பு மேம்பட்ட AI திறன்களை டுவிட்டர் என முன்பு அழைக்கப்பட்ட எக்ஸ்-ன் பரந்த பயனர் தளத்துடன் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இனி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI உடன் தனது பயணத்தை தொடங்கப்போகிறது. அதே வேளையில் பயனர்களுக்கு இது சிறந்த அனுபவங்களை உறுதியளிக்கிறது.

2022 ஆம் ஆண்டு 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட டிவிட்டர் தற்போது 33 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் xAI நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 2.82 ல...