இந்தியா, ஜூன் 26 -- அனைவராலும் விரும்பி பருகக்கூடிய பானங்களில் ஒன்றாக காபி இருந்து வருகிறது. பிளாக் காபி, கருப்பட்டி காபி, பால் காபி, கேரமல் காபி முதல் குளிர்ச்சியான கோல்ட் காபி வகை பல்வேறு விதமான காபி வகைகள் இருக்கின்றன. அதன்படி சமீபத்திய காலங்களில் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாக நெய் காபி. இதனை புல்லட் காபி எனவும் அழைக்கிறார்கள்.

ஊட்டச்சத்து நிபுணர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் 'நெய் காபி' அல்லது 'நெய் டீ' பற்றி பதிவுகளை பகிர்கிறார்கள். இது ஒரு ஆயுர்வேத மருந்து எனவும், குழந்தை பருவத்திலிருந்தே குடித்து வரும் பானம் எனவும் கூறுகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகைகளில் நன்மை தரக்கூடியதாக இருந்து வரும் இந்த எளிய பானம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க...