இந்தியா, மார்ச் 13 -- தமிழ்நாட்டில் பெரும்பாலானவரின் வீட்டில் காலை உணவாக இருப்பது இட்லி தான். இட்லி என்றால் அனைவருக்கும் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவாகவும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அதிக ஹோட்டல்களில் இட்லியை காலை உணவாக இருந்து வருகிறது. இட்லி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இத்தகைய இட்லியை செய்வதற்கு நாம் முந்தைய நாள் இரவே அரிசியை ஊறவைத்து மாவை அரைத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் மாவு நன்கு புளித்து இட்லி சிறப்பாக வரும். சில சமயங்களில் நமக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக இட்லி மாவு அரைக்காமல் இருப்போம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் வெளியில் கடைகளில் விற்கும் இட்லி மாவினை சிலர் வாங்கி சமைப்பார்கள். ஆனால் கடைகளில் விற்கப்படும் எல்லா இட்லி மாவும் சுத்தமான மற்றும் சரியான மு...