இந்தியா, மார்ச் 31 -- இட்லி, தினமும் காலையில் அனைத்து இல்லங்களிலும் இருக்கும் ஒரு உணவாகும். இதை செய்வதற்கு நாம் கொஞ்சம் மெனக்கெட்டால் மிகவும் மிருதுவான இட்லியைப் பெறமுடியும். இதற்கு நாம் பயன்படுத்தும் அரிசி மற்றும் உளுந்தின் அளவு மிகவும் முக்கியம். அதுமட்டுமின்றி மாவை புளிக்க வைக்கும் கால அளவும் மிகத்துல்லியமாக இருக்கவேண்டும். அப்போதுதான் இட்லி நன்றாக இருக்கும்.

* உளுந்து - ஒரு கப்

* அரிசி - 4 கப்

* (இட்லி அரிசி சிறந்தது. இட்லி அரிசி இல்லையென்றால், 3 கப் புழுங்கல் அரிசியும், ஒரு கப் பச்சரிசியும் எடுத்துக்கொள்ளவேண்டும்)

* அவல் - ஒரு கப்

* வெந்தயம் - ஒரு ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

1. இட்லி மாவு அரைக்க தேவையான பொருட்கள் குறைவுதான். ஆனால் நீங்கள் அதை அரைக்கும் பக்குவம் மிகவும் முக்கியமானது. அரிசியை நன்றாக ஓரிரு முறை அலசவேண்டும். பின...