இந்தியா, மார்ச் 30 -- என்னதான் மார்க்கெட்டில் இஞ்சி-பூண்டு விழுது கிடைத்தாலும் ஃபிரஷ்ஷாக வீட்டிலே அரைத்து தயாரிக்கும் இஞ்சி-பூண்டு பேஸ்ட்க்கு நிகராக முடியாது. வீட்டிலே இஞ்சி-பூண்டு பேஸ்டை பக்குவமாக செய்து பத்திரமாகப் பாதுகாப்பது எப்படி என்று பாருங்கள். வெஜ் முதல் நான் வெஜ் வரை பிரியாணி முதல் கிரவி வரை என அனைத்துக்கும் இஞ்சி-பூண்டு விழுது மிகவும் முக்கியமானது. இஞ்சி - பூண்டை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் நாம் எளிதாக மற்ற வேலைகளை செய்து நினைத்த உணவை தயாரித்து விடலாம். மசாலா சேர்க்காத இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து செய்யும் மற்ற உணவுகளை தயாரிக்க தயங்க தேவையில்லை.

இதை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைத்தால் சுவை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் உங்களுக்கு தேவையில்லை. இதை வைக்கும்போது அதில் சிறிது எண்ணெய் கலந்து வைத்தால் போதும். அது நீண்ட நாட்கள் வ...