இந்தியா, ஜூன் 27 -- இந்திய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக சேர அழைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, இந்தபட்டியலில் இந்தியாவின் முக்கிய ஆளுமைகளான கரண் மல்லி (காஸ்டிங் இயக்குநர்), ரணபிர் தாஸ் (ஒளிப்பதிவாளர்), மாக்சிமா பாசு (ஆடை வடிவமைப்பாளர்), ஸ்மிருதி முந்த்ரா (ஆவணப்படத் தயாரிப்பாளர்) மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா பிரபலங்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

மோஷன் பிக்சர் அகாடமியில் சேர அழைக்கப்பட்ட இவர்களுடன் அரியானா கிராண்டே, பிராண்டி கார்லைல், ஆண்ட்ரூ வாட், ப்ரான்போர்ட் மார்சலிஸ், கோனன் ஓ பிரையன் மற்றும் ஜிம்மி கிம்மல் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச அளவில் டேவ் பாடிஸ்டா, ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, டேனியல் டெட்வைலர் மற்றும் ஆண்ட்ரூ ஸ்காட் போன்ற ...