இந்தியா, ஏப்ரல் 11 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

'ஆவாரைப் பூத்திருக்கச் சாவரை கண்டதுண்டா' என்பதைக் கேட்டூள்ளீர்களா? ஆவாரம் பூ என்பது சிறந்த காய கற்ப மருந்து. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி பல்வேறு நன்மைகளைக் கூறுகிறது. ஆவாரம் பூ உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து மருத்துவர் காமராஜ் தனது அண்மை வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

'ஆவாரைப் பூத்திருக்கச் சாவரைக் கண்டதுண்டா?' ஆவாரம் பூ ஒரு மிகச் சிறந்த காய கற்ப மூலிகை. காயம் என்றால் உடல் கற்பம் என்றால் நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்ற ஐந்தையும் குறிப்பிடும். நரை என்றால் ...