இந்தியா, ஏப்ரல் 21 -- தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார் ஏப்ரல் 25, 26ஆம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்திலுள்ள ராஜ்பவனில் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து,டெல்லியில் சனிக்கிழமையன்று ஜெகதீப் தன்கரை சந்தித்த ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மகாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். ஆளுநர் ரவியின் அழைப்பை ஏற்று, நீலகிரியில் நடைபெற இருக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மகாநாட்டில் கலந்து கொள்கிறார் குடியரசு துணத்தலைவர் ஜெகதீப் தன்கர்.

இதற்கிடையே, கடந்த வாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் உட்பட தமிழ்நாடு அரசின் 10 சட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்திருக்கும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் மகாநாட்டை கூட்டியது தவறு என திமுக உள்பட அரச...