இந்தியா, மார்ச் 23 -- ஃபளாக்ஸ் விதைகள் சிறிய அளவாகத்தான் இருக்கும். அதில் எண்ணற்ற நன்மைகள் உண்டு. ஆனால் அதிகம் சாப்பிட்டால் அவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னவென்று பாருங்கள். ஆசிய மற்றும் தென் ஐரோப்பாவில் வளரும் தாவர உணவாகும். பொன்னிறமும், சிவப்பு நிறமும் கலந்த ஒரு நிறம் கொண்டது இந்த விதைகள். இதில் நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் லிக்னன்கள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உட்பொருட்களும் உள்ளது. இதை அதிகம் எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல், அலர்ஜி உள்ளிட்டவை ஏற்படும். அவற்றை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

ஃப்ளாக்ஸ் விதைகள் தமிழில் ஆளி விதைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் மற்றும் இதன் எண்ணெய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எரிச்சல், வீக்கம், சிவத்தல் போ...