Chennai, ஏப்ரல் 5 -- இனிப்பு, காரம் போன்ற சுவைகளில் பல்வேறு உணவுகளை தயார் செய்யும் உணவு பொருள்களில் ரவை முக்கியமானதாக இருந்து வருகிறது. ரவை உப்புமா தொடங்கி ரவை தோசை, ரவை வடை, ரவை கேசரி என ரவை வைத்து தயார் செய்யும் அன்றாட உணவுகள் ஏராளமாக உள்ளன. இதுதவிர ரவையை வைத்தும், ரவையை பிற உணவு பொருள்களோடு சேர்ததும் சில புது மாதிரியான பலகாரங்கள், உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் ரவையை வைத்து க்ரீமியான ரவை அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஸ்ரீ ராம நவமி நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது. இந்த நாளில், அனைத்து ராமர் கோயில்களிலும் ராமர் - சீதாவுக்கு கல்யாணமஹோட்சம் செய்யப்படுகிறது. மேலும், வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடவுளுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. இனிப்புகளை மிகவும் விரும்பும் க...