Chennai, மார்ச் 18 -- காலை, மாலை நேர வடை, பஜ்ஜி போன்றவை பிரதான ஸ்நாக்ஸ் ஆகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாகவும் இருந்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் வடை, பஜ்ஜி, கேசரி, பயறு வகைகள் போன்றவை இல்லாமல் காலை மற்றும் மாலை பொழுதை கடக்க முடியாது என்றே சொல்லலாம்.

நம்மூர்களில் வடை, பஜ்ஜி எப்படியே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் மக்கள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆக புனுகுலு இருந்து வருகிறது. அரிசி மாவு, மைதா மாவ போன்றவற்றில் சீரகம் போன்ற சில பொருள்களை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி பொறித்து சமைப்பது தான் புனுகுலு. அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் வெறும் மாவுகளில் மட்டுமல்லாமல் பருப்புகளை நன்றாக அரைத்து ஆரோக்கிய ஸ்நாக்ஸ் ஆகவும் தயார்படுத்தி சாப்பிடலாம்....