Hyderabad, மே 20 -- கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் பானமாகவும் இருந்து வருகிறது ஜல்ஜீரா. இது வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிப்பதோடு, செரிமான அமைப்பையும் பாதுகாக்கிறது. தெருவோரோ கடைகளிலும், ஜூஸ் சென்டர்களில் கிடைக்கும் இந்த குளிர்ச்சி பானத்தை வீட்டில் வைத்தும் எளிதாக தயார் செய்து பருகலாம். கடைகளில் கிடைக்கும் அதே சுவையுடன் இந்த ஜூஸை பருகி மகிழலாம்.

கோடையில், வெயில் மற்றும் வெப்பம் காரணமாக தண்ணீர் பருக வேண்டும் என்கிற தாகம் அதிகமாகவே இருக்கும். எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், சில சமயங்களில் தாகம் தணியாமலும் போகும். அந்த வகையில் தாகத்தை தணிக்ககூடிய குளிர்ச்சியான மற்றும் சுவையான பானமாக திகழும் ஜல்ஜீராவை தண்ணீர், சீரகம் மற்றும் புதினா போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருள்களால் தயாரிக்கப்படுகிறத...