Chennai, மார்ச் 1 -- முளைகட்டிய பயறுகள் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிப்பதாக உள்ளன. முளைகளை தினமும் தவறாமல் சாப்பிட்டால் அதன் பலன்களை முழுமையாக பெறலாம். இதன் நன்மைகள் அறிந்த பலரும் தங்களது உணவில் முளை கட்டிய பயறு வகைகள் ஏதேனும் ஒன்றை தங்களது டயட்டில் தவறாமல் சேர்த்துகொள்கிறார்கள்.

என்னதான் சத்துக்கள் நிறைந்திருந்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக முளை கட்டிய பயறுகள் இருப்பதில்லை. ஆனால் அவர்களுக்கு இதை பிடித்தமான உணவாக மாற்ற, இந்த வகையில் சமைத்து பரிமாறினால் விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள். முளைகட்டிய பயறுகளை அரைத்து மாவு போன்று மொன்மையாக்கி பனியாரமாக தயார் செய்து குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல் கொடுப்பதன் மூலம் ருசித்து சாப்பிடுவார்கள். அத்துடன் முளை கட்டிய பயறுகளின் முழு பலன்...