இந்தியா, மார்ச் 11 -- பார்லி என்பது தானிய வகை உணவாக இருப்பதுடன் பன்முக தன்மை கொண்டதாகவும் இருந்து வருகிறது. சூப்பர் உணவாக கருதப்படும் பார்லி மற்றும் சில காய்கறிகளை சேர்த்து சூப் தயார் செய்து பருகுவதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளுடன், சில ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். நார்ச்சத்து நிறைந்த இந்த சூப் சுவையைுடன், செரிமானம் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி, எடை இழப்பு போன்றவற்றையும் வழங்குகிறது.

கோதுமை வகைகளில் ஒன்றாக இருந்து வரும் பார்லி, உலகம் முழுவதும் பயிரிடப்படும் தாவரங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன. வாற்கோதுமை என்று அழைக்கப்படும் பார்லியில் 3.3 கிராம் புரதம், 19.7 சதவீதம் கால்சியம், 0.4 கொழுப்பு சத்து உள்ளது. இதுதவிர நார்ச்சத்து, மாங்கனீசு, செலினியம், தாமிரம், வைட்டமின் பி, சி, பி12, குரோமியம், பாஸ்பரஸ், மெக...