Chennai, மார்ச் 2 -- உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகளில் முக்கியமானதாக கொண்டைக்கடலை இருந்து வருகிறது. இதன் காரணமாகவே இது காலை அல்லது மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய சிறந்த உணவாக திகழ்கிறது. கொண்டக்கடலையை பல்வேறு வகைகளில் உணவாக தயார் செய்து சாப்பிடலாம். கொண்டக்கடலையை பச்சையாவோ அல்லது வறுத்தோ சாப்பிட முடியாது. அதை வேக வைத்து மட்டும் தான் சாப்பிடலாம்.

வேக வைத்த கொண்டக்கடலையை பல்வேறு விதமாக உணவாக தயார் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் கொண்டக்கடலையுடன் பல காய்கறிகளை ஒன்றாக சேர்த்து சலாட்டாக தயார் செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியம் மிக்க காலை உணவாக இருப்பதோடு, உடல் எடை குறைக்க விரும்புவோருக்கு நல்ல பலன் அளிக்கும் உணவாகவும் திகழ்கிறது.

மேலும் படிக்க: பலம் தரும் முளைகட்டிய பயறு சாலட் செய்வது எப்படி?

ஏனென்றால் கொண்டக்கடலை புரதம் நிறைந்து காணப்பட...