இந்தியா, ஏப்ரல் 25 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப்பக்களில் சித்த மருத்துவக்குறிப்புக்களை வழங்கிவருகிறார். இதன் மூலம் அவர் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் கூறும் தீர்வுகளை நாம் வீட்டிலேயே கடைபிடிக்க முடியும். அந்த வகையில் எளிய குறப்புக்களை வழங்கி வருகிறார். இவர் தனது அண்மை வீடியோவில், தேமலுக்கு வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய தீர்வு குறித்து தெரிவித்துள்ளார். இதை நீங்கள் பின்பற்றி பயன்பெற முடியும்.

தேமல், டேனியா வெர்சிகாலர் எனப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும். ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் வரலாம். தேமலை தீராத பிரச்னையாக நீங்கள் கருதலாம். இதற்கு திப்பிலி உங்களுக்கு உதவும். திப்பிலி இரண்டு வகைப்படும். அரிசி திப்பிலி, ஆனித்திப்பிலி ...