இந்தியா, மே 19 -- மூளைக்கு ஊட்டமளிக்கும் உணவுகள் என்னவென்று பாருங்கள். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு அவர்கள் சாப்பிடும் உணவுகள்தான் பெருமளவுக்கு உதவும். குழந்தை வளரும் ஆரம்ப காலங்களில் அவர்கள் சாப்பிடும் சமஅளவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுதான் அவர்களுக்கு பெருமளவுக்கு உதவும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், அவர்களின் மூளை, நினைவாற்றல் மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவும். உங்கள் குழந்தைகளின் மூளையை வளர்க்கும் ஆரோக்கியமான உணவுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

முட்டையில் சோலைன்கள் அதிகப்படியாக உள்ளது. இது மூளையின் நினைவாற்றல் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஆரோக்கிய கொழுப்புக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் கொண்டது. இது உடலில் ஆற்றல் அளவை அதிகரித்து, உங்கள் மூளையின் இயக்கத்துக்கு உதவுகிறது.

முந்திரி உள்ளிட்ட நட்ஸ்கள், பரங்கி வி...