இந்தியா, மே 12 -- ஆரோக்கியமான மூளைக்கு ஏற்ற சிறந்த உணவுகள் என்ன? ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிப்பதில் சரியான ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் குழந்தைகளின் மூளை ஆரோக்கியம் மற்றும் அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் கொடுக்கவேண்டிய உணவுகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பாதாம், வால்நட்ஸ்கள், ஃப்ளாக்ஸ் விதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற நட்ஸ்களில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளது. அது குழந்தைகளின் மூளை செல்களை பாதுகாத்து மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

பெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. பெரிகள் மூளையின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. ப்ளூபெரிகள், ஸ்ட்ராபெரிகள் மற்றும்...