இந்தியா, மார்ச் 18 -- பசும்பாலுக்கு மாற்றாகவும், லாக்டோஸ் இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த பாலாகவும் சோயா பால் இருந்து வருகிறது. தாவரம் சார்ந்த பால் பொருளாக இருந்து வரும் சோயா பால், பசும்பால் போல் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஆனால் சோயா பாலை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். இதன் மூலம் பாதுகாப்பு பொருள்கள் (preservatives) கலப்புகள் இல்லாமல் இயற்கையான முறையில் சோயா பால் பெறுவதோடு, அதன் சத்துக்களையும் முழுமையாக அனுபவிக்கலாம்.

சோயாபீன்களை சுவையான மற்றும் சத்தான பானமாக மாற்றுவது மிகவும் எளிமையானது தான். இதை பசும்பாலுக்கு மாற்றாக காபி, டீ போன்ற பானங்களில் கலந்து பருகலாம். வீட்டிலேயே சோயா பாலை எப்படி தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: டின்னருக்கு சோயா பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்...