இந்தியா, மார்ச் 12 -- சூப் என்பது மிகவும் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. சாப்படுவதற்கு முன்னர் பரிமாறப்படும் சூப்கள், திரவ உணவாக இருப்பதுடன் இதில் காய்கறி, இறைச்சி, பருப்புகள், தானியங்கள், விதைகள் என சேர்த்து தயார் செய்யப்பட்டு பரிமாறப்படுகிறது.

சூப் பருகுவதால் பசி தூண்டப்படும் எனவும், பசி உணர்வை கட்டுக்குள் வைக்கப்படும் எனவும் இரு வேறு விதமான கருத்துகள் நிலவி வருகின்றன. இருப்பினும் நீங்கள் பருகும் சூப் வகைகளை பொறுத்து மேற்கூறப்பட்ட கருத்து பொருந்தி போகலாம்.

சூப் என்றாலே நினைவுக்கு வரும் சூப் வகையாக தக்காளி சூப் இருந்து வருகிறது. பெரும்பாலோனர் விரும்பி பருகக்கூடியதாக இருந்து வரும் தக்காளி சூப் தயார் செய்வதற்கு மிகவும் எளிமையானதோடு மட்டுமல்லாமல், தக்காளி மட்டுமே போதுமானதாக இருப்பதும்தான். அதே போல் சூப் வகை மெனுக்களில் தவறாமல...