இந்தியா, ஜனவரி 6 -- உங்களுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் முருங்கைக்கீரை அள்ளித்தருகிறது. தெளிவான சருமத்தைப் பெற இந்தக் கீரையை நீங்கள் பயன்படுத்தலாம். முருங்கை என்பது ஒரு மாய மரம் என்றே கூறலாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்துக்குப் பொலிவைத்தரும் உட்பொருட்கள், வயோதிகத்தைத் தடுக்கும் திறன் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஆற்றல் கொண்டது. இது வயோதிகத்தை எதிர்த்துப் போராடுகிறது. இது இயற்கை குணங்கள் கொண்டது. இது உங்களின் சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சரும பளபளப்பு மற்றும் இளமையான தோற்றத்தைப் பெறுவதற்கு நீங்கள் முருங்கைக் கீரையை எப்படி பயன்படுத்தவேண்டும் என்றும், அதன் பலன்கள் என்னவென்றும் பாருங்கள்.

முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வைட்டமின் ஏ, சி மற்றும் இ போன்றவை உள்ளது. இது உங்...