இந்தியா, ஜூன் 23 -- நீங்கள் அதிகாலையிலே எழுந்துவிடுவது உங்களுக்கு எத்தனை நன்மைகளை தருகிறது என்று பாருங்கள். மேலும் நீங்கள் அதிகாலையிலே ஏன் எழுந்திருக்கவேண்டும் என்றும் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றியாளர்கள் பெரும்பாலானோர், அதிகாலையில் துயில் எழுபவர்களாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பரிசோதித்து வேண்டுமானால் பார்க்கலாம். அதிகாலையில் துயில் எழுபவர்களுக்கு பல உடல் மற்றும் மன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மைதான். விடிந்து நீண்டநேரம் வரை படுக்கையில் படுத்திருப்பது என்பது நல்லதல்ல. நீங்கள் அதிகாலையில் துயில் எழுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொண்டால் இனிமேல் தினமும் அதிகாலையில் கண் விழித்துவிடுவீர்கள். அதிகாலை துயில் எழுபவர்களுக்கு அந்த ஒரு நாள் இரண்டு நாளுக்கு சமம். நீங்கள் அத்தனை வேலைகளை செய்து முடித்துவிடலாம்.

காலைப்பொழுது எப்போதும...