இந்தியா, ஏப்ரல் 28 -- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை காப்பாற்றவே கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டாரா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க:- தமிழ்நாட்டில் எம்-சாண்டு, பி-சாண்டு, ஜல்லி விலைகள் குறைப்பு! எவ்வளவு தெரியுமா?

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புதிதாக கட்டப்பட்ட வீட்டை பார்வையிட சென்றபோது, ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக...