இந்தியா, பிப்ரவரி 28 -- தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் அரசியல் செயல்பாடுகளுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது மனைவி டெய்சி விளக்கம் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக டெய்சி தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில், நான் டெய்சி, ஆதவ் அர்ஜுனாவும் நானும் எப்போதும் எங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை தனித்தனியாக வைத்திருக்க தேர்வு செய்தோம் என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அனைத்து தொழில்முறை, அரசியல் முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் சுயாதீனமாக எடுக்கப்படுகின்றன. அதற்கும் எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த அறிவிப்பு, ஒருவருக்கொருவர் வாழ்வில் நாம் ஈடுபடுவது குறித்து பரப்பப்படும் தவறான தகவல்கள், ஊகங்கள், வதந்திகள் மற்றும் யூகங்கள் அனைத்...