இந்தியா, ஏப்ரல் 22 -- செவ்வாய்க்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளின் அழகிய பெயர்களை தெரிந்துகொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகள் தைரியசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இங்கு பலம், தைரியம் மற்றும் தலைமைப்பண்பு ஆகியவற்றை குறிக்கும் பெயர்களை உங்கள் வீட்டு இளவரசர்களுக்கு தேர்ந்தெடுத்து மகிழுங்கள்.

ஆருஷ் என்றால் சூரியனின் முதல் கதிர் என்று பொருள். இது பலம், புதிய துவக்கம் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்தப் பெயர் செவ்வாய்க்கிழமையில் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஏற்ற பெயராகும். செவ்வாய்க்கிழமையில் பிறந்த உற்சாகமான மற்றும் நெருப்பானவர்களாக இருப்பவர்களுக்கு சரியான பெயர்.

ஷார்வ் என்பது சிவனின் பெயர். இதற்கு பாதுகாவலன் மற்றும் பலமானவன் என்று பொருள். இது தைரியம், தலைமைப் பண்பு மற்றும் தெ...