இந்தியா, மே 27 -- வாழ்வில் ஒளி என்ற அர்த்தம் கொண்ட ஆண் குழந்தைகளின் பெயர்கள் என்னவென்று பாருங்கள். ஒளி என்பது தெளிவு, நம்பிக்கை, ஞானம் மற்றும் தெய்வீக இருப்பின் அடையாளம். நீங்கள் உங்கள் ஆண் குழந்தைகளுக்கு இந்த நேர்மறையான அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை தேடினீர்கள் என்றால், அவர்களுக்கு இங்கு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களுக்கு ஒளி என்று பொருள். இந்திய மொழிகள் மற்றும் சமஸ்கிருதத்தில் இருந்தும் இந்தப்பெயர்கள் எடுக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் என்பது கிளாஸிக் பெயர். இது ஒரு சமஸ்கிருதப் பெயராகும். இதற்கு ஒளி மற்றும் பிரகாசம் என்று பொருள். இது ஞானம் மற்றும் ஆன்மீகத்தின் ஒளியைக் காட்டுகிறது.

தீபான்ஷ் என்ற நவீன பெயருக்கு ஒளியின் அங்கம் என்று பொருள். விளக்கின் ஒளிக்கீற்று என்றும் பொருள். உங்கள் குழந்தை வாழ்வின் வழிகாட்டி என்பதைக் குறிக்கும...