இந்தியா, பிப்ரவரி 24 -- இந்தியாவில் பலவிதமான அசைவ உணவுகள் செய்யப்படுகின்றன. அதில் சிக்கன் மற்றும் மட்டன் கறி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் இஸ்லாமியர்கள் செய்யும் பல அசைவ உணவுகள் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டில் ரம்ஜான் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் போதும் உடனே பிரியாணி வேண்டும் என கேட்பது உண்டு. அந்த அளவிற்கு அவர்கள் செய்யும் உணவுகள் மீது அனைவருக்கும் தனிப்பிரியம் உண்டு. உணவிற்கு என எந்த பிரிவினையும் கிடையாது. சுவையாக இருந்தால் அனைவரும் சாப்பிடுவார்கள். அவர்களின் வழக்கமான உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் பருப்பு பாயா, இதனை வீட்டிலேயே செய்ய முடியும். இந்த சமையல் முறையை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

4 ஆட்டுக்கால்

2 பெரிய வெங்காயம்

2 தக்காளி

அரை கப் கடலைப்பருப்பு ...