இந்தியா, மார்ச் 31 -- ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2025 தொடர் ஜோர்டான் நாட்டின் அம்மான் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில், பல்வேறு எடைப்பிரிவில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த தொடரின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதன்படி தீபக் புனியா, உதித் குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தையும், தினேஷ் கோலிய வெண்கலத்தையும் வென்றனர்

ஆண்கள் ப்ரீஸ்டைஸ் போட்டியில் 61 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் உதித் குமார், ஜப்பான் நாட்டின் டகாரா சுடா ஆகியோருக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் 6-4 புள்ளிகள் கணக்கில் ஜப்பான் வீரர் வெற்றி பெற்றார்.

காலிறுதியில் கஜகஸ்தான் வீரர் பெக்போலோட் மிர்சனாசர் உலு என்பவரை 6-9 என்ற கணக்கிலும், அரையிறுதியில் சீ...