இந்தியா, மே 7 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

புதன் பகவான் படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர் புதன் பகவான். புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் புதன் பகவான் கேது பகவானின் அஸ்வினி நட்சத்திரத்தில் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று நுழைகின்றார். புதன் பகவானின் அஸ்வினி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கு...