இந்தியா, மார்ச் 24 -- உங்கள் உடலின் எடையைக் குறைப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல,உடல் எடையைக் குறைப்பதற்கு குறுக்கு வழியும் கிடையாது. அதிக கிலோக்களை குறைப்பதற்கு தொடர் முயற்சியும் தேவைப்படுகிறது. மனஅழுக்கம் மோசமான வாழ்க்கை முறையும் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றன. இயற்கை முறையில் உடல் எடையைக் குறைப்பது நல்லது. அதில் அஷ்வகந்தா உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் மூலிகைகளுள் ஒன்றாகிறது. இந்த மூலிகை கார்டிசாலை முறைப்படுத்துகிறது. கார்டிசால் என்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் ஆகும்.

உடல் எடையைக் குறைப்பதில் அஷ்வகந்தா முக்கிய பங்கு வகிக்கிறது. கார்டிசால் அளவு அதிகரித்தால் பசியும் அதிகரிக்கும். குறிப்பாக இனிப்பான, கொழுப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்று கொழுப்பு சேமிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது. அ...