இந்தியா, மார்ச் 26 -- அவலில் வடை செய்யமுடியும். அதையும் இன்ஸ்டன்ட்டாக செய்யலாம். இது ஒரு தென்னிந்திய ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் இருந்தால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த வடைக்கும் அவல் மற்றும் மசாலாக்கள் தேவை. இந்த வடை வெயில் நல்ல கிரிஸ்பியாகவும், உள்ளே நல்ல மொறுமொறுப்பாகவும் இருக்கும். இது மிருதுவாக சுவை நிறைந்த வடையாகும். இதை டீயுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது பசிக்கு ஏற்றதாகிறது. இதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும். இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* அவல் - 2 கப்

* சீரகம் - ஒரு ஸ்பூன்

* இஞ்சி - கால் இன்ச்

* பச்சை மிளகாய் - 1

* மல்லித்தழை - ஒரு ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* உப்பு - தேவையான அளவு

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் - தேவையான அளவு

* அரிசி மாவு - 3 ...