இந்தியா, மார்ச் 16 -- அவகோடா சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கிய கொழுப்புகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவகோடாக்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது செரிமானம், மூளை இயங்க மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க, சரும பளபளப்பு, ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரித்து உடலின் பொது ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

அவகேடோ பழங்களில் மோனோ சாச்சுரேடட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நன்மையைத் தருகிறது. உடலில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைக்கிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

100 கிராம் அவகேடோவில் 7 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கலைத...