இந்தியா, மார்ச் 17 -- உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. உருளைக்கிழங்கு சாற்றை சருமம் மற்றும் தலைமுடியில் பூசும்போது அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. அவற்றின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அவற்றை பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்றுகிறது. உருளைக்கிழங்கு இல்லாத வீடுகளே இருக்க முடியாது. எனவே அதை பயன்படுத்துவதும் எளிது.

ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. இது உங்கள் கூந்தலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். ஊட்டமளிகுக்கும். இதனால் அது உங்கள் கூந்தலை நன்றாக கண்டிஷனிங் செய்வதாக நம்பபப்படுகிறது. வறட்சியைப் போக்குகிறது. முடி உதிர்வைக் குறைக்கிறது. உடையக்கூடிய தன்மை கொண்டது.

உருளைக்கிழங்கு சாறு தடவுவதால் ஏற்படும் மாற்றங்கள் உங்கள் தலைமுடியில் தெரிவதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும். உங்கள் முடியின் வேர்க்கால்க...