இந்தியா, மே 3 -- உங்களுக்கு எண்ணெய் சருமம் என்றால், நீங்கள் கழுவிய சில மணி நேரங்களில் அதில் எண்ணெய் வடியும். அது உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். எண்ணெய் சருமத்தை செபாசியஸ் கிளாண்ட் என்ற சுரப்பிதான் ஏற்படுத்துகிறது. அதிகளவில் சீபம் உற்பத்தியானால், அது துவாரங்களை அமைடத்து, முகப்பருக்களை உருவாக்கும். எண்ணெய் சருமம் சிலருக்கு இளமை தோற்றத்தை தரும். முகச்சுருக்கத்தைக் குறைக்கும். இந்த சருமத்தை பாதுகாப்பது என்ற எண்ணற்ற குழப்பங்கள் மற்றும் கட்டுக்கதைகள் இங்கு உள்ளன. அவை என்னவென்று பாருங்கள்.

எண்ணெய் சருமத்துக்கு மாய்சுரைசர் தேவையில்லை என்பது பொதுவான கட்டுக்கதையாகும். ஏற்கனவே எண்ணெய் வழியும் சருமத்துக்கு ஏன் அதிகளவில் மாய்சுரைசரை போடவேண்டும்? ஆனால் போடாவிட்டால் சருமத்தில் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். சரும வறட்சியைப் போக்க அதிக எண்ணெய் சுரக...