Chennai, ஏப்ரல் 13 -- ஆண்களை காட்டிலும் பெண்கள் சருமத்தின் அழகை பேனி பாதுகாக்க பல்வேறு வகைகளில் மெனக்கெடுகிறார்கள். பளபளப்பான சருமத்தைப் பெற விரும்பும் பலரும் பார்லர் சென்று பேஷியல், பிளீச்சிங் போன்ற அழகு குறிப்பு முறைகளை பின்பற்றுகிறார்கள். இவற்றால் உரிய பலனை பெறலாம் என்றாலும், அவை நீண்ட காலம் நீடிப்பது என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

இதுமட்டுமல்லாமல் சரும் அழகை தக்கவைக்க பல்வேறு வீதமான கிரீம்கள் மற்றும் லோஷன்களும் பயன்படுத்துகிறார்கள். இவையெல்லாம் சருமத்தை பிரகாசமாகவும், பளபளபாகவும் காட்டினாலும் அவற்றை தக்க வைக்காது. மேலும், இதுபோன்ற அழகு குறிப்பு முறைகளை பின்பற்றுவதால் பணத்தையும் செலவழிக்க நேரிடலாம்.

பார்லருக்குச் செல்லாமல், எந்த செலவும் இல்லாமல் உங்கள் முகத்தை வீட்டிலேயே நீராவி பேஷியல் செய்வதன் மூலம் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை...