Chennai, மார்ச் 3 -- முகத்தின் அழகை பராமரிக்கவும், சருமத்தை பேனி பாதுகாக்கவும் அனைவராலும் ரசாயனங்கள் கலந்த அழகுசாதனப் பொருள்களை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கெமிக்கல் கலந்த காஸ்மடிக்ஸ் பொருள்களை காட்டிலும் வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கை பொருள்களைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு, முகத்தையும் பிரகாசமாக்கலாம்.

அந்த வகையில் சருமத்தை மென்மையாக்குவது முதல், அவற்றை பளபளப்பாக்கும் மாயாஜால பொருளாக படிகார கற்கள் இருந்து வருகின்றன. இதனை கொண்டு உங்கள் சருமத்தை மென்மையாக்குவதோடு, படிகாரத்தில் இருக்கும் சரும ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கும் பொருளாக படிகார கற்கள் இருந்து வருகின்றன. பல்வேறு வகைகளில் பயன்படக்கூடிய படிகார கற்களை அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். சந்தைகளில் கிடைக்...