இந்தியா, ஏப்ரல் 12 -- வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகோடா இதய ஆரோக்கியம், எடை இழப்பு என உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான முக்கிய நன்மைகளை தருகிறது. உடல் ஆரோக்கியத்தை போல் உங்களின் சரும ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாத்து முக அழகை தக்க வைக்க உதவுகிறது. இந்த பழத்தை ஃபேஸ் பேக் வடிவில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கலாம், அதே சமயம் பிரகாசத்தையும், மென்மையை மீட்டெடுக்கவும் உதவுகிறது. சரும நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க செய்யும் அவகோடா, முகத்தில் தோன்றும் வயதான அறிகுறிகள் ஏற்படுவதை தடுக்கிறது.

சருமத்தில் எந்தவொரு பக்க விளைவுகளையும் தவிர்க்க இந்த பழத்தை சரியான பொருட்களுடன் இணைந்து பயன்படுத்துவது மிக முக்கியம். அவகோடா பழத்தை சருமத்துக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், அதன் மூலம் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை பா...