இந்தியா, மார்ச் 12 -- அகத்தின் அழகையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் பேனி பராமரிக்க பியூட்டி பார்லர், ஸ்பா, சலூன்களுக்கு செல்வதற்கு பதிலாக சில இயற்கையான முறைகளை பின்பற்றுவதன் மூலம் எதிர்பார்த்த பலன்களை பெறுவதோடு, சரும பாதிப்புகளையும் தவிர்க்கலாம். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்துக்கான சூப்பர் உணவுகளின் ஒன்றாக இருந்து வரும் அத்திப்பழம், சரும ஆரோக்கியத்திலும், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

அத்திப்பழத்தில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உள்ளன. இவை இளமையிலேயே வயது முதிர்வாவது போன்ற தோற்றத்தை தடுப்பது முதல் பளபளப்பான சருமத்தை அளிப்பது வரை பல்வேறு சரும பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. அத்திப்பழத்தால் சருமத்துக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம்

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும...