இந்தியா, மே 11 -- இந்து மதத்தை பொறுத்தவரை ஏகாதசி விரதங்கள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு மொத்தம் 24 ஏகாதசி விரதங்கள் வரும். எத்தனை விரதங்கள் இருந்தாலும் அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது என்பார்கள். அந்தவகையில் மே - ஜூன் மாதங்களில் ஜேஷாஸ்த மாதத்தில் வரும் ஏகாதசிக்கு 'அபரா ஏகாதசி' என்று பெயர். அபரா என்றால் அளவில்லாத என்று பொருள். அளவில்லாத நலன்களை தரக்கூடியது இந்த ஏகாதசி ஆகும்.

வைதிக நாட்காட்டியின்படி, ஜேஷ்ட மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி மே 23 ஆம் தேதி இரவு 01:12 மணிக்குத் தொடங்கும். இந்தத் திதி மே 23 ஆம் தேதி இரவு 10:29 மணிக்கு முடிவடையும். உதய திதியின்படி, அபரா ஏகாதசி விரதம் மே 23 ஆம் தேதி அனுசரிக்கப்படும். இந்த நாள் பெருமாளை வழிபடுவதற்கும் அவரது ஆசியைப் பெறுவதற்கும் மிகவும் பொருத்தமானது...